முல்லுண்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பறவை காவடி, அலகு குத்தி சாமி தரிசனம்

முல்லுண்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பறவை காவடி, அலகு குத்தி சாமி தரிசனம்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முல்லுண்டு ஓம் சக்திவேல் முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்தி வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

மும்பை,

முல்லுண்டு ஓம் சக்திவேல் முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்தி வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

பால்குடம், காவடி

மும்பை முல்லுண்டு மேற்கு விஜய் நகர் பகுதியில் உள்ள ஓம் சக்திவேல் முருகன் கோவிலில் 50-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. காலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் அணிவித்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

காலை 9 மணி முதல் பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்று சாமியை தரிசனம் செய்தனர். ஜே.சி.பி. எந்திரத்தில் பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்து சென்றார். இதேபோல சில பக்தர்கள் அலகு குத்தி ஆம்னி வேன், ஆட்டோ போன்ற வாகனங்களை இழுத்து சென்றனர்.

சாமி தரிசனம்

மதியம் 12 மணிக்கு மேல் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணியளவில் முருகன், வள்ளி தேவசேனா உற்சவ மூர்த்திகள் நகர்வலம் வருதல் நடந்தது. திருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர் செய்து இருந்தனர்.

1 More update

Next Story