ராகுல் காந்திக்கு எதிராக போஸ்டர்: பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


ராகுல் காந்திக்கு எதிராக போஸ்டர்: பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 8:00 PM GMT (Updated: 6 Oct 2023 8:00 PM GMT)

ராகுல் காந்திக்கு எதிரான பா.ஜனதாவின் போஸ்டரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

மும்பை,

ராகுல் காந்திக்கு எதிரான பா.ஜனதாவின் போஸ்டரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் பிளவு

பா.ஜனதா கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் சமீபத்தில் ராகுல் காந்தியை "புது யுக ராவணன்" என சித்தரித்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டருக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று மராட்டியத்தில் மும்பை உள்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே மற்றும் கட்சி தலைவர் நசீம் கான் ஆகியோர் செம்பூரில் போராட்டம் நடத்தினர். அதேநேரம் கட்சியின் மும்பை பிரிவு தலைவர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேட்டிவார் ஆகியோர் தெற்கு மும்பையில் பேராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி தலைவர் நானா படோலே பேசியதாவது:-

ராகுல் காந்தி பிரபலம்

பா.ஜனதா தான் ராவணன் போல செயல்படுகிறது. அவர்கள் பயத்தின் காரணமாக ராகுல் காந்தியை அவதூறு செய்கின்றனர். ஆனால் ராகுல் காந்திக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால், அதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக்கொள்ளாது. மகாத்மா காந்தியை ராவணனாக சித்தரித்த அதே வில்லத்தனமான போக்கு தற்போது ராகுல் காந்தியை இழிவுபடுத்துகிறது. இந்து, முஸ்லிம்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி, பல்வேறு சாதியினரிடையே பகையை வளர்த்து நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசியல் சாசனம், ஜனநாயகம், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவை அப்படியே இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி போராடுகிறார். இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு பிறகு ராகுல் காந்தி பிரபலமடைந்து வருவதை கண்டு பா.ஜனதா பீதியில் உள்ளது. மேலும் அவரது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க இதுபோன்ற தந்திரங்களை கையாளுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story