தானே மாநகராட்சியில் ரூ.345 கோடி சொத்து வரி வசூலிப்பு


தானே மாநகராட்சியில் ரூ.345 கோடி சொத்து வரி வசூலிப்பு
x

தானே மாநகராட்சியில் ரூ.345 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

தானே,

தானே மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்த கடந்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த காலகட்டத்தில் வரிகளை செலுத்துபவர்களுக்கு வரிச்சலுகை வழங்குவதாக மாநகராட்சி அறிவித்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக தானே மாநகராட்சி உதவி கமிஷனர் கோட்புரே தெரிவித்து உள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், "கடந்த ஜூலை 31-ந் தேதி வரை மாநகராட்சி ரூ.345 கோடி வரையில் சொத்து வரி வசூலித்து உள்ளது. இதனை செலுத்திய குடிமக்களுக்கு 4 சதவீத வரிச்சலுகை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.260 கோடி தான் வசூலிக்கப்பட்டு இருந்தது. நடப்பு ஆண்டில் வருகிற 4 மாதத்தில் சொத்து வரி ரூ.770 கோடி வரை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நடவடிக்கையை தவிர்க்க நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்" உள்ளார்.


Next Story