விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது

விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:45 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் ரூ.4.18 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ரூ.4.18 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.

பெங்களூரூ செல்ல திட்டம்

மும்பை சர்வதேச விமான நிலையம் 2-வது டெர்மினஸ் போர்ட்டிங் கேட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் கருப்பு நிற பை ஒன்று கிடந்ததை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டனர். சில நிமிடங்களில் அந்த பையை 2 பயணிகள் எடுத்துக்கொண்டு அவசர, அவசரமாக உள்நாட்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் பெங்களூரூ செல்லும் விமானத்தில் ஏற முயன்றனர். இதனை கவனித்த வீரர்கள் அவர்களை வழிமறித்து பையை திறந்து சோதனை போட்டனர்.

2 பேர் கைது

இந்த சோதனையில் பையில் 8 கிலோ 800 கிராம் எடையுள்ள 23 தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 18 லட்சம் ஆகும். இதையடுத்து 2 பேரையும் பிடித்து சாகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹிராஸ் மற்றும் இலங்கையை சேர்ந்த முகமது ருசைத் அகமது எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தங்கம் அடங்கிய பையை வீசி சென்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story