பேராசிரியர் சாய்பாபாவுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு பன்றி காய்ச்சல்


பேராசிரியர் சாய்பாபாவுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு பன்றி காய்ச்சல்
x

மாவோயிஸ்டு தொடர்பு வழக்கில் கைதான பேராசிரியர் சாய்பாபாவுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு பன்றி காய்ச்சல்

மும்பை,

மாவோயிஸ்டு தொடர்பு வழக்கில் உபா சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர் டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. இவருடன் பாண்டு நரோடே உள்பட மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் நாக்பூர் சிறையில் ஜி.என்.சாய்பாபாவுடன் பாண்டு நரோடேவும் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் பாண்டு நரோடேவுக்கு கடந்த 20-ந் தேதி கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது. உடனடியாக அவர் அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story