கவர்னர் மீது உத்தவ் தாக்கரே காட்டம்


கவர்னர் மீது உத்தவ் தாக்கரே காட்டம்
x

மும்பையை இழிவாக பேசிய, கவர்னருக்கு கோலாப்பூர் செருப்பை காட்ட வேண்டிய நேரம் இது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையை இழிவாக பேசிய, கவர்னருக்கு கோலாப்பூர் செருப்பை காட்ட வேண்டிய நேரம் இது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

செருப்பை காட்டும் நேரம்

மராட்டியத்தில் உள்ள குஜராத்தி, ராஜஸ்தானியர்களை வெளியேற்றி விட்டால் உங்களிடம் பணமே இருக்காது, மும்பை நாட்டின் நிதி தலைநகராக என பேசினார். கவர்னரின் இந்த சர்ச்சை பேச்சு மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் பேச்சுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

பகத்சிங் கோஷ்யாரி கடந்த 2½ ஆண்டுகளில் மராட்டியத்தில் அழகிய சிவாஜியின் கோட்டைகள், குகைகள் மற்ற நல்ல விஷயங்களை எல்லாம் பார்த்து இருப்பார். ஆனால் தற்போது அவருக்கு கோலாப்பூர் செருப்புகளையும் காட்டும் நேரம் வந்துவிட்டது. ஏனெனில் கோலாப்பூர் செருப்பும் மராட்டியத்தின் பெருமை தான். ஒருவர் இதுபோல எப்படி வேண்டுமானாலும் திரித்து பேசலாம். ஆனால் கண்டிப்பாக கோலாப்பூர் செருப்புகளை பகத்சிங் கோஷ்யாரிக்கு காட்டும் நேரம் இது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

நான் கவர்னர் பதவியை மதிக்கிறேன். அந்த நாற்காலியில் இருப்பவரும் அந்த பொறுப்பை மதிக்க வேண்டும். ஆனால் பகத்சிங் கோஷ்யாரி அதை செய்யவில்லை. அவர் மராட்டியத்தில் 3 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக உள்ளார். தற்போது அவர் மராத்திய மக்களை அவமதிக்கிறார். அவர் தற்செயலாக தவறாக பேசவில்லை. அவரின் பேச்சுக்கள் மும்பையில் எழுதப்படுகிறதா அல்லது டெல்லியில் எழுதப்படுகிறதா என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரிக்க வேண்டும். மராத்தியர்கள் மீது அவர் தேக்கி வைத்து இருந்த வெறுப்பு தற்போது வெளிப்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவர் ஏற்கனவே சாவித்ரிபாய் புலே பற்றி அவதூறாக பேசினார்.

பகத்சிங் கோஷ்யாரியை வீட்டு அனுப்ப வேண்டுமா அல்லது ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமா என்பதை முடிவு செய்யும் நேரம்வந்துவிட்டது. மும்பை, தானேயில் தேர்தல் வர உள்ள நிலையில் அவர் இந்துக்களை பிளவுப்படுத்துகிறார். மராத்தியர்கள் போராடி மும்பையை பெற்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story