பெஸ்ட் பஸ்சில் பெண் டிரைவர் அறிமுகம்- உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்


பெஸ்ட் பஸ்சில் பெண் டிரைவர் அறிமுகம்- உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்
x

பெஸ்ட் பஸ்சில் முதல் முறையாக பெண் டிரைவரை உத்தவ் தாக்கரே அறிமுகம் செய்து தொடங்கி வைக்கிறார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

பெஸ்ட் பஸ்சில் முதல் முறையாக பெண் டிரைவர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்த பஸ் சேவையை விரைவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்கிறார்.

பெஸ்ட் பஸ் சேவை

மும்பையில் கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி பெஸ்ட் பஸ் சேவை அப்போதைய பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதல் முறையாக தொடங்கப்பட்டது. இந்த பஸ்களில் தற்போது சுமார் 3,200 டிரைவர்களும், 4,100 நடத்துனர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும் மும்பை மாநகரத்தில் மினி மற்றும் ஏ.சி. பஸ்கள் என 3 ஆயிரத்து 500 பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மும்பை பெஸ்ட் குழுமத்தில் முதல் முறையாக பெண் டிரைவர் பணியாற்ற உள்ளதாக பெஸ்ட் குழுமம் தெரிவித்து உள்ளது.

முதல் முறையாக பெண் டிரைவர்

இதுபற்றி பெஸ்ட் பஸ் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா கூறுகையில், பெஸ்ட் வரலாற்றில் பெண் டிரைவர் நகரத்தில் பஸ்களை இயக்குவது இதுவே முதல் முறை. நூற்றாண்டு பழமையான நகர போக்குவரத்து சேவையில் முதல் பெண் டிரைவராக லஷ்மி ஜாதவ் (வயது 42) என்பவர் எலக்ட்ரிக் பஸ்சில் பணியாற்ற உள்ளார்.

இதற்காக அவருக்கு முறையான பயற்சி அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் மேலும் பல பெண் டிரைவர், நடத்துனர்களை பணியில் நியமிக்க உள்ளோம்.

தாராவி முதல் தென்மும்பை

பெண்களை பஸ் டிரைவராக மற்றும் நடத்துனர்களாக அறிமுகப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி வருகிற 27 அல்லது 28-ந் தேதி முதல் பெண் டிரைவர் லஷ்மி ஜாதவை அறிமுகம் செய்து, பஸ் சேவையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைக்க உள்ளார்.

அவர் தாராவி பஸ் டிப்போ முதல் தெற்கு மும்பை இடையே பஸ்சை இயக்க பணியில் அமர்த்தப்பட உள்ளார் என அவர் தெரிவித்தார்.

----


Next Story