சரத்பவார் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தது ஏன்?


சரத்பவார் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தது ஏன்?
x

சரத்பவார் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

சரத்பவார் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

வெளியே நின்று தரிசனம்

தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று புனேயில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது தகதுசேத் கணபதி கோவிலில் வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்குள் செல்லாமல் வெளியே நின்று தரிசனம் செய்தது என்? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதுபற்றி புனே நகர தேசியவாத காங்கிரஸ் பிரிவு தலைவர் பிரசாந்த் ஜக்தாப்பிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

அசைவ உணவு

சரத்பவார் கோவிலுக்குள் சென்று தான் சாமி தரிசனம் செய்ய நினைத்திருந்தார். ஆனால் முன்னதாக அவர் அசைவ உணவு சாப்பிட்டு இருக்கிறார். இதனால் தான் அவர் கோவிலுக்குள் செல்லாமல் வெளியே நின்று தரிசனம் செய்ததாக என்னிடம் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் பதிலளிக்கையில், "சரத்பவார் சாமி தரிசனம் செய்ய சென்றால், அது பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. இல்லாவிட்டால், அவர் நாத்திகர் என்று குறிப்பிடப்படுகிறார். இது ஏன்" என்று கூறினார்.

சரத்பவார் நாத்திகர் என்று கூறப்படுவதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story