மகாட் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து தொழிலாளி பலி - 4 பேருக்கு சிகிச்சை
மகாட் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து தொழிலாளி பலியானார்
ராய்காட்,
ராய்காட் மாவட்டம் மகாட் அம்ஷேட் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று காலை 8.30 மணி அளவில் யூனிட் பகுதியில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளிகள் மயக்கம் போட்டு கீழே விழுந்தனர். இதனை கண்ட அங்கிருந்த மற்ற தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விஷவாயு கசிவை சரி செய்தனர். இதன்பின்னர் மயக்கமடைந்த தொழிலாளர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ஒரு தொழிலாளி உயிரிழந்தது தெரியவந்தது. மற்ற 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த அகிலேஷ் சிங் எனவும் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.