ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் வெற்றி


ஆசிய விளையாட்டு போட்டி; இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் வெற்றி
x
தினத்தந்தி 20 Aug 2018 3:51 AM GMT (Updated: 20 Aug 2018 3:51 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளில் இந்தியாவின் பி.வி. சிந்து பேட்மிண்டன் கால் இறுதியில் இன்று வெற்றி பெற்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளில் இன்று பேட்மிண்டன் மகளிர் அணிக்கான கால் இறுதி போட்டி நடந்தது.

இதில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் ஜப்பான் நாட்டின் அகானே யமகச்சி விளையாடினர்.  இந்த போட்டியின் முதல் செட்டில் அகானே முன்னிலை பெற்றார்.  அவரை 5-5 என்ற புள்ளி கணக்கில் சமன் செய்த சிந்து பின்னர் தொடர்ந்து போட்டியை தன்வசப்படுத்தினார்.

அவர் முதல் செட்டை 21-18 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.  அதன்பின்னர் 2வது செட்டிலும் அகானே 10-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார்.

எனினும், 19-19 என்ற புள்ளி கணக்கில் போட்டியை சமநிலைக்கு கொண்டு சென்ற அகானேவிடம் இருந்து 2வது செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் சிந்து கைப்பற்றினார்.

இதனால் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-18, 21-19 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் அகானே யமகச்சியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Next Story