ஆசிய விளையாட்டு போட்டி: ஆடவர் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயம் - தமிழக வீரர் வெண்கலம் வென்றது செல்லாது என அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் வெண்கலம் வென்றது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. #AsianGames2018
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று தடகளத்தில் 10000 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வீரர் லக்ஷ்மணனனுடன் 12 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பஹ்ரைன் வீரர் ஹசன் சானி 28 நிமிடம் 35:54 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு பஹ்ரைன் வீரர் ஆப்ரஹாம் செரோபென் 29 நிமிடம் 00:29 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதில் தமிழக வீரர் கோவிந்தம் லக்ஷ்மணன் வெண்கலம் வென்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் லட்சுமணன் ஓட்டப்பந்தய தடத்திற்கு வெளியே கால் வைத்ததால் தகுதியிழப்பு செய்யப்பட்டதாகவும், இதனால் அவர் வெண்கலம் வென்றது செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story