இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி: பேட்மிண்டன் இறுதிபோட்டிக்கு சுகாஷ் யத்திராஜ் தகுதி!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Sep 2021 3:50 AM GMT (Updated: 4 Sep 2021 3:50 AM GMT)

பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியவீரர் சுகாஷ் யத்திராஜ் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

டோக்கியோ, 

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதில் இந்தியாவின் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக இந்திய வீரர் மனோஜ் சர்கார் தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றார்.  

இந்நிலையில் ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் இந்தோனேஷியாவின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுகாஷ் யத்திராஜ் 11 நிமிடங்களில் முதல் சுற்றை 21-9 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றை 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாராஒலிம்பிக் பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

கர்நாடக மாநில பிறந்தவரான சுகாஷ் யத்திராஜ் 2007ஆம் ஆண்டு ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நாளை காலை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சுகாஷ் ய்த்திராஜ் பங்கேற்க உள்ளார். 

இதனிடையே எஸ்.எல் 3 பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான இந்தியாவின் பிரமோத் பகத் தகுதி பெற்றுள்ளார். அவர் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் பெத்தேலை எதிர்த்து விளையாட உள்ளார்.  

Next Story