உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனை பிங்கி அரைஇறுதியில் தோல்வி


உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனை பிங்கி அரைஇறுதியில் தோல்வி
x
தினத்தந்தி 4 Oct 2021 10:39 PM GMT (Updated: 2021-10-05T04:09:01+05:30)

உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பிங்கி அரைஇறுதியில் தோல்வியடைந்தார்.

ஒஸ்லோ, 

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 55 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி தகுதி சுற்றில் தென்கொரியாவின் கிம் சோயினை வீழ்த்தினார். அவர் கால்இறுதியில் கஜகஸ்தானின் ஆயிஷா அலிஷனை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 

62 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், காயத்தில் இருந்து மீண்டு 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய இந்திய வீராங்கனை சங்கீதா போகத் 4-6 என்ற புள்ளி கணக்கில் பிரேசிலின் லாய்ஸ் நூனஸ்சிடம் வீழ்ந்து நடையை கட்டினார். இந்திய வீரர்கள் சத்யவார்த் காடியன் (97 கிலோ), சுஷில் (70 கிலோ) ஆகியோர் தகுதி சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

Next Story