கைவெடிகுண்டாக மாறும் செல்போன்கள்... பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!


கைவெடிகுண்டாக மாறும் செல்போன்கள்... பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!
x

கோப்புப்படம் 

இன்றைய காலத்து குழந்தைகள் செல்போனையே தங்களின் உலகமென கொண்டிருக்கின்றனர்.


புராண கதைகளில் சொல்லப்படும் சிவன் கையில் ஒட்டிய திருவோடுபோல, இன்று அனைவரது கையையும் ஒட்டிக்கொண்டிருக்கிறது செல்போன்கள். நிலாவை காட்டி சோறூட்டிய காலம் போய் செல்போனைக்காட்டி சோறூட்டும் நிலையாகிவிட்டது. அன்று பார்க்க தொடங்கும் குழந்தைகள், நாட்கள் செல்ல செல்போனையே உலகமாக்கிக்கொள்கின்றனர்.

அப்பா, அம்மா, அக்கா என ஒரே வீட்டில் சொல்போனில் முடங்க குழந்தைகளை சமூகத்தைவிட்டு விலக்கிவிடுகிறது. இது எப்போது மதிப்பெண்ணில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அப்போதுதான் பெற்றோர்கள் செல்போனை பறிக்க முயற்சித்து, குழந்தைகள் தங்கள் உயிரை தாங்களே பறித்துக் கொள்ளும் அவலமும் அரங்கேறுகிறது.

இனை சுட்டிக் காட்டும் உளவியல் நிபுணர் அபிலாஷா, தற்கொலைக்கு செல்போனும் காரணம் என அழுத்தமாக கூறுகிறார். குழந்தைகள் தற்கொலைக்கு செல்போனும் காரணம் பெற்றோர்கள் தங்கள் வேலையை சுலபமாக தங்கள் குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்கின்றனர். அவர்கள் கார்டூன் படங்கள் பார்ப்பது, செல்போனில் விளையாடுவது என அதிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.

பின்னர் பெற்றோர்கள் சென்போனை வாங்கும்போது குழந்தைகளுக்கு கோபம் வருகிறது. ஒருசில குழந்தைகள் செல்போனுக்காக பெற்றோரை அடிக்கும் அளவுக்கு அவர்கள் மனநல பாதிப்புக்கு ஆளாகின்றனர். "குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகிறார்கள்" "வாழ்க்கையை எதிர்கொள்ள சமூக அனுபவம் வேண்டும்"

ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என வாழ்க்கையில் வெற்றி தோல்வியை கற்றுக்கொடுக்கும் விளையாட்டை உணர்த்தியிருப்பார் கவிஞர் பாரதி. ஆனால் இன்றைய குழந்தைகளோ செல்போனில் விளையாடும் சூழல்தான். மறுபுறம் படி, படியென பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை மாணவர்கள் மீது திணிப்பதும் சுமையாக அமைகிறது.

குழந்தைகளை 3 வயதிலே படி, படியென டியூசன் அனுப்புவது எல்லாம் ஒரு சமூக கேடு என ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் கல்வியாளர்கள். இதுபோன்ற சூழல்கள் அனைத்தும் குழந்தைகளை பக்குவம் இல்லாமல் பலவீனம் ஆக்குகிறது. அவர்களை எது பிரச்சனை.. எவ்வாறு அதனை சரி செய்வது என்று யோசிக்காமல் தவறான முடிவுகளை எடுக்கவைக்கிறது என்பது மன நல மருத்துவர்களின் கூற்றாக உள்ளது. இத்தகைய சூழலில் பெற்றோர்கள் பொறுப்புடன் நடக்கவேண்டும்.


Next Story