வாலிபரின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி


வாலிபரின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி
x

வாலிபரின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி நெ.1 டோல்கேட் மகாலெட்சுமிநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சதிஷ் (வயது 32). இவர் ஒரு தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்துள்ளார். இவருடைய செல்போனுக்கு கடந்த 11-ந் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் 'அவருடைய கிரெடிட் கார்டில் ரூ.6,889 மதிப்பு பயன்பாட்டுக்கான புள்ளிகள் காலாவதியாக உள்ளதாகவும், அந்த தொகையை மீண்டும் பெற வேண்டுமானால் கீழே உள்ள லிங்கை திறந்து செயலியை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து சதிசும் அந்த லிங்கை திறந்து அதில் குறிப்பிட்டுள்ள செயலியை பதிவேற்றம் செய்தார்.

பின்னர் அந்த செயலியில் பெயர், கார்டு எண், பிறந்த தேதி, இ-மெயில் ஐ.டி., செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்துள்ளார். அதன்பிறகு சதிசின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 700 மோசடியாக எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சைபர்கிரைம் போலீசில் இணையதளம் மூலமாக புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story