105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வயர்லெஸ் சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, அங்கு தடை செய்யப்பட்ட 105 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ், ஏர்போர்ட் காமராஜ் நகர் காந்தி தெருவை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story