இஸ்ரேலில் சிக்கி தவித்த மேலும் 12 பேர் கோவை திரும்பினர்


இஸ்ரேலில் சிக்கி தவித்த மேலும் 12 பேர் கோவை திரும்பினர்
x
தினத்தந்தி 15 Oct 2023 1:00 AM IST (Updated: 15 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேலில் சிக்கித்தவித்த மேலும் 12 பேர் கோவை திரும்பினர். இந்தியா்களை மீட்க மத்திய, மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்
இஸ்ரேலில் சிக்கித்தவித்த மேலும் 12 பேர் கோவை திரும்பினர். இந்தியா்களை மீட்க மத்திய, மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.


இஸ்ரேல்-ஹமாஸ் போர்


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் நடைபெற்று வருகிறது. இதனால் இஸ்ரேலில் தங்கி உள்ள இந்தியர்கள் ஆபரேசன் அஜய் என்ற சிறப்பு திட்டம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படு கிறார்கள். அதன்படி முதல்கட்டமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து 212 பேர் நேற்று முன்தினம் சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.


இதில் இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி., முதுகலை படிப்பு படித்து வந்த கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் விமா னத்தில் கோவை விமானநிலையம் வந்தடைந்தனர். அதைத் தொடர்ந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் 2-ம் கட்டமாக சிறப்பு விமானத்தில் மேலும் 12 பேர் நேற்று மாலை 4 மணியளவில் கோவை விமானநிலையம் வந்தடைந்தனர்.


கோவை வந்தனர்


அவர்களில் கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்த மனோஜ்குமார், திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக், வினயா, கரூரை சேர்ந்த குமாரவேல், சஹானா, கார்த்திகா, திருப்பூரை சேர்ந்த கவுதமன், திருப்பத்தூரை சேர்ந்த ஷர்மிளா, சேலத்தை சேர்ந்த ஸ்டீபன் ரிச்சர்டு, பவுலின் மற்றும் புதுச்சேரியை சோ்ந்த மாரிமுத்து, யாகுல் ஆகிய 12 பேர் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அதன்பின்னர் மற்றொரு விமானம் மூலம் கோவை வந்தனர். அவர்களில் 2 பேர் குழந்தைகள்.


கோவை விமானநிலையத்தில் அவர்களை தமிழக அரசு சார்பில் ஆர்.டி.ஓ. கோவிந்தன் மற்றும் விமானநிலைய அதிகாரிகள் வர வேற்றனர். விமானநிலையத்தை விட்டு வெளியே வந்த அவர்க ளை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டித் தழுவி ஆனந்தத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கார் மூலம் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.


தொடர்பில் உள்ளனர்


முன்னதாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பத்திரமாக கோவை திரும்பியவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-


இஸ்ரேல் நாட்டில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். இதில் ஒருவர் மட்டும் 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறினார்கள். அவரும் நேற்று கிடைத்து விட்டார். மெயில் மூலம் அனைவரும் தொடர்பில் உள்ளனர்.


இஸ்ரேலில் உள்ள இந்தியர்க ளை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இது இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. தூதரகம் மூலம் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களை அடையாளம் கண்டு தொலைபேசியில் அடிக்கடி பேசி அழைத்து வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பே பணிக்கு வர வேண்டாம் என்று இஸ்ரேல் அரசு அறிவித்தது. உணவு, தண்ணீர், தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்தார்கள்.


மத்திய மாநில அரசுக்கு நன்றி


போர் பதற்றம் காரணமாக அங்கு இரும்பு பெட்டி போன்று பாதுகாப்பு கூண்டு வைத்து உள்ளனர். அவ்வப்போது அறிவிப்பு கொடுப்பார்கள். அப்போது அந்த பாதுகாப்பான இடத்துக்குள் சென்று பதுங்கிக்கொள்வோம். ராணுவ வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள் அடிக்கடி சத்தமிட்டு சென்றது தான் பயமாக இருந்தது.


மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் மட்டுமே இந்தி யாவிற்கு திரும்ப முடிந்தது. இதற்காக மத்திய, மாநில அரசுக ளுக்கு நன்றி. இஸ்ரேலில் சகஜநிலை திரும்பியதும் மீண்டும் அங்கு செல்வோம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


போர் பதற்றம்


இஸ்ரேல் நாட்டின் மெட்ரோ நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றிய கோவைப்புதூரை சேர்ந்த மனோஜ்குமார் கோவை திரும்பினார். அவர், கூறுகையில், நான் 2019-ம் ஆண்டு இஸ்ரேல் சென்றேன்.

மத்திய இஸ்ரேலில் உள்ள நர்த்தான்யாவில் தங்கி இஸ்ரேஸ் மெட்ரோ நிறுவனத்தில் புராஜெக்ட் மேலாளராக பணி யாற்றினேன். நான் தீபாவளிக்கு ஊருக்கு வர திட்டமிட்டு இருந்தேன். ஆனால் தற்போது போர் பதற்றம் காரணமாக முன் எச்சரிக்கையாக கோவை திரும்பினேன் என்றார்.



Next Story