வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு


வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
x

வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தில் மத்திய எரிசக்தி துறையும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூர் தேசிய அனல் மின் கழகத்தை அமைத்தது இங்கு 3 யூனிட்டுகளில் தலா 500 வீதம் 1,500 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மின் நிலையத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். வல்லூரில் உள்ள அனல் மின் கழக இடத்தில் குடியிருப்பு அமைத்து இவர்கள் இங்கே தங்கி பாதுகாப்பு பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு வீட்டை பூட்டிக் கொண்டு சென்றனர். இதையடுத்து 4 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நேற்று மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள, சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகேந்திரன், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர் அப்போது 2 பேரின் கைரேகைகள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி்றார்.


Next Story