126-வது மலர் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை


126-வது மலர் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 9 May 2024 10:44 AM IST (Updated: 9 May 2024 10:44 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி 126-வது மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சியும் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) 126-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story