சென்னையில் 43 இடங்களில் புதிதாக 129 சி.சி.டி.வி. கேமராக்கள் - மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்


சென்னையில் 43 இடங்களில் புதிதாக 129 சி.சி.டி.வி. கேமராக்கள் - மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
x

குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் சரகத்திற்கு உட்பட்ட 43 இடங்களில் நவீன வசதிகள் கொண்ட 129 சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

இந்த கேமராக்கள் பழுதடைந்தாலோ, அல்லது இவற்றை யாரேனும் சேதப்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தியாக தகவல் வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சி.சி.டி.வி. கேமராக்களில் வைஃபை வசதி உள்ளதாகவும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.Next Story