13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு


13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் -  தமிழக அரசு உத்தரவு
x

சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே. ஆதிவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

13 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

*சி.பி.சி.ஐ.டி. ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*ராணிப்பேட்டை ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

*கோயம்புத்தூர் மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

*அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ்க்கு திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

*தொழில்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக விவேகானந்தா சுக்லாவுக்கு பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது.

*ஆனந்த் குமார் ஐ.ஏ.எஸ்., அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரிக்கு, மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

*காரைக்குடி எஸ்.பி. ஸ்டாலினுக்கு கோவை நகர வடக்கு பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

*சென்னையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக டி. ரமேஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே. ஆதிவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராக எஸ்.எஸ். மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story