திருட்டுத்தனமாக மது விற்ற 14 பேர் கைது


திருட்டுத்தனமாக மது விற்ற 14 பேர் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 14 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பதை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, மாநெல்லூர்ஏரிக்கரை, தேர்வாய், தேர்வழி டாஸ்மாக் கடை, காயலார்மேடு, ஈகுவார்பாளையம், தச்சூர் கூட்டுசாலை. எளாவூர் டாஸ்மாக் கடை, ராக்கம்பாளையம், வேற்காடு மற்றும் கீழ்முதலம்பேடு ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மேற்கண்ட இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக நங்கபள்ளத்தை சேர்ந்த கோபி (வயது 46), மாநெல்லூர் ரவிச்சந்திரன் (38), காட்டு அப்பாவரம் செல்வம் (53), தேர்வாய் மணிகண்டன் (38), ராகவரெட்டிமேடு கர்ணன் (36), ஈகுவார்பாளையம் குமார் சிங் (29), ஆதித்யா கார்டன் மூர்த்தி (48), தச்சூர் தர்மராஜ் (44), கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் நகர் அப்பு (33), பேரையூர் முருகன் என்கிற சுதாகர் (35), ராக்கம்பாளையம் காசி (37), சிந்தலகுப்பம் சிவகுமார் (42), பிரபு (22) மற்றும் கும்மிடிப்பூண்டி தபால் தெரு முகமது யாசர் அராபாத் (31) ஆகிய 14 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 14 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 240 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story