தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று சதமடித்த வெயில்


தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று சதமடித்த வெயில்
x

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக சேலம், ஈரோடு உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது. சூரியனின் நேரடி தரிசனத்தால் இந்த பகுதிகள் அனைத்தும் கந்தக பூமியாக மாறியுள்ளது.

கத்தரி வெயில் தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கிடையே, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் 14 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை பதிவுசெய்த இடங்கள்:

* ஈரோடு - 107.6

* திருப்பத்தூர் - 106.52

* தருமபுரி - 106.16

* வேலூர் - 105.98

* திருத்தணி - 105.08

* கரூர் பரமத்தி - 104.36

* சேலம் - 104.18

* மதுரை விமான நிலையம் - 103.28

* மதுரை நகரம் - 102.92

* கோவை - 102.56

* திருச்சி - 102.38

* நாமக்கல் - 102.2

* மீனம்பாக்கம் - 101.48

* தஞ்சாவூர் - 100.4


Next Story