ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது


ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது
x

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை தலைவர் காமினி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி போலீஸ் சூப்பிரண்டு் கீதா மேற்பார்வையில் சென்னை சரக குடிமைப்பொருள் போலீஸ் துணை கண்காணிப்பாளர் மனோகரன், திருவள்ளூர் அலகின் இன்ஸ்பெக்டர் சதீஷ், சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டு ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மீஞ்சூர் போலீசார் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தபோது ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. அதில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிவாஜி நகரை சேர்ந்த காமேஷ் (வயது 28), சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜி (21), பிரகாஷ் என்கிற சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Next Story