1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்களுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்காக தமிழகம் முழுவதும் மின் வாரியம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று (30.12.2022) 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.64 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 1.73லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை மொத்தம் 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன." என்று கூறியுள்ளார்.