திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறல்: பயிற்சி எஸ்.ஐ. உள்பட 4 காவலர்கள் கைது
திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் 17 வயது சிறுமியிடம் அத்துமீறிய பயிற்சி எஸ்.ஐ. உள்பட 4 காவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி,
திருச்சி முக்கொம்பு அணைக்கு நண்பருடன் சென்ற 17வயது சிறுமியிடம் 4 காவலர்கள் அத்துமீறியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிறுமியின் புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் சரக தனிப்படையை சேர்ந்த பயிற்சி எஸ்.ஐ. சசிகுமார், காவலர்கள் பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகிய 4 பேர் மீது ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
Related Tags :
Next Story