காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கிய 2 பேர் கைது
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
தாக்குதல்
காஞ்சீபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 9 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் செவிலிமேடு ஜெம் நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் 2 வாலிபர்கள் கடனாக மது வழங்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு விற்பனையாளர்களான தம்மனூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மற்றும் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த தேவராஜன் ஆகியோர் மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த சுமன் (வயது 23) மற்றும் பிரதாப் (25) ஆகியோர் முனுசாமி மற்றும் தேவராஜ் மீது காலி கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த தேவராஜ் மற்றும் முனுசாமி சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கைது
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார், தாக்குதல் நடத்திய சுமன் மற்றும் பிரதாப் ஆகியோரை கைது செய்தனர். டாஸ்மாக் கடை ஊழியர்கள் தாக்கப்பட்டதை அறிந்த காஞ்சீபுரத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர்கள் கைதுக்கு பின் வழக்கம்போல் இயங்கியது.