கிண்டி, சைதாப்பேட்டையில் குடிபோதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்திய 2 டிரைவர்கள் கைது


கிண்டி, சைதாப்பேட்டையில் குடிபோதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்திய 2 டிரைவர்கள் கைது
x

கிண்டி, சைதாப்பேட்டையில் குடிபோதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்திய 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் வேகமாக வந்த ஆட்டோ மோதிய விபத்தில் பரிமளா (வயது 44), தேவி (49) ஆகிய 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல் சென்னை அசோக் நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் கிஷோர்குமார் (24) என்பவர் படுகாயம் அடைந்தார்.

இந்த 2 விபத்துகள் குறித்து தென்சென்னை போக்குவரத்து உதவி கமிஷனர் குமாரவேல், கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் சைதாப்பேட்டை விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் பொழிச்சலூரை சேர்ந்த கோபிநாத் (39) என்பதும், அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. அதேபோல் அசோக் நகரில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான நாமக்கலை சேர்ந்த பிரபு (32) என்பவரும் அளவுக்கு அதிகமாக போதையில் ஒட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 வழக்குகளிலும் ஆட்டோ டிரைவர் கோபிநாத், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்குகளில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இதுவே முதல்முறை என போலீசார் தெரிவித்தனர்.


Next Story