உத்தரப்பிரதேசத்தில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து - இருவர் பலி, 6 பேர் காயம்


உத்தரப்பிரதேசத்தில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து - இருவர் பலி, 6 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Aug 2022 5:20 PM IST (Updated: 3 Aug 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேன் மீது டேங்கர் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

முசாபர் நகர்,

உத்தரப்பிரதேசம் மாநிலம் கடோலி-புதானா சாலையில் நேற்று இரவு வேன் மீது டேங்கர் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

சத்தேதி கங்கை கால்வாய் அருகே கடோலி-புதானா சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஹபீஸ் ஷாஹித் (வயது 60) மற்றும் ஜெயவதி (வயது 50) என்ற இருவர் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. விபத்து நடந்தவுடன் டேங்கர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story