சாராயம் விற்ற 2 பேர் கைது
சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விரியூர், வடசிறுவள்ளூர் பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 23) என்பவர் விரியூர் ஏரிக்கரை பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் வடசிறுவள்ளூரில் அதே பகுதியை சேர்ந்த விஜயன் (25) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து மொத்தம் 120 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story