சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா


சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா
x

கோப்புப்படம் 

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், மகள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மதுரை,

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், அந்த நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு பரிசோதனை செய்திட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் பயணிகளுக்கு, விமான நிலைய வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், மகள் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர்களுக்கு சோதனை செய்ததில், தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இவர்களுடன் விமானத்தில் வந்த 67 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

சீனாவில் இருந்த வந்த இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், அது பி.எப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story