ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு


ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
x

ஊத்துக்கோட்டை அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகை திருடப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 50). விவசாயி. இவரது மனைவி உமாராணி. 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது.

ஒரு மகள் சென்னையிலுள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் நதியாவுக்கு சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இதனால் அவர் தாய் வீட்டில் இருந்து வருகிறார். நதியாவுக்கு குழந்தை பிறந்ததையொட்டி முனுசாமி நேற்று முன்தினம் விருந்து அளித்தார். பின்னர் இரவு அனைவரும் தூங்கி விட்டனர்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த நதியாவுக்கு சொந்தமான 20 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

இது குறித்து முனுசாமி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


Next Story