ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது: விசைப்படகுகள் பறிமுதல்; இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம் மீனவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரம்,
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை, எல்லை கடந்து மீன்பிடித்தனர் எனக்கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதன்பின், அவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, விசாரணைக்காக அவர்களை அழைத்து சென்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்பின்னர், காங்கேசன் கடற்படை முகாமுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது.
Related Tags :
Next Story