வங்கி அதிகாரிகளுக்கு எதிரான புகாரை எழும்பூர் போலீஸ் விசாரிக்க வேண்டும்


வங்கி அதிகாரிகளுக்கு எதிரான புகாரை எழும்பூர் போலீஸ் விசாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Aug 2017 3:45 AM IST (Updated: 14 Aug 2017 10:35 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெப்கோ வங்கியின் தலைமை மேலாளராக இருப்பவர் கமலக்கண்ணன்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் வங்கியின் கிளை மேலாளர்கள் கூட்டம் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் நான் கலந்துகொண்டேன். அப்போது ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் திட்ட அதிகாரி வெங்கடாசலம், என்னுடைய சாதியை இழிவாக குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்தார். ரெப்கோ பைனான்ஸ் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேட்டை நான் சுட்டிக்காட்டியதாலும், புதிதாக எஸ்.சி., எஸ்.டி. தொழிற்சங்கம் நான் தொடங்கியதாலும், வங்கியின் மேல் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில், என்னை இவ்வாறு அவர் மிரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘மனுதாரரின் புகார் மீது எழும்பூர் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அதில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.


Next Story