ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ விசாரணை ஆணையத்தில் அளிக்கப்படும்: டிடிவி தினகரன்


ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ விசாரணை ஆணையத்தில் அளிக்கப்படும்: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 11 Nov 2017 5:20 PM IST (Updated: 11 Nov 2017 5:29 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ விசாரணை ஆணையத்தில் அளிக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ விசாரணை ஆணையத்தில் அளிக்கப்படும். வீடியோவை வெளியிடக்கூடாது என அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்படும். 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சோதனை 3வது நாளாக நீடிக்கிறது. வருமான வரி சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை; எங்களிடம் பாதாள அறை எதுவும் இல்லை”  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story