கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்; வீடுகளுக்குள் நீர் புகுந்தது


கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்; வீடுகளுக்குள் நீர் புகுந்தது
x
தினத்தந்தி 21 April 2018 9:14 PM IST (Updated: 21 April 2018 9:14 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்தினால் வீடுகளுக்குள் நீர் புகுந்தது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் மார்த்தாண்டம் அருகே கொட்டில்பாடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  கடலில் வழக்கம்போல் இன்றி அலைகள் வேகமுடன் வீசி வருகின்றன.  குளச்சல், கொட்டில்பாடு மற்றும் வள்ளவிளை பகுதிகளில் கடல் அலைகளின் வேகம் அதிகரித்துள்ளது.

கடல் சீற்றம் காரணமாக, கடல்நீர் வீட்டுக்குள் புகுந்தது.  இதனை தொடர்ந்து வள்ளவிளை கரையோரம் உள்ள மீனவர்களை முகாம்களுக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.  கடல்நீர் வீட்டுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாற்று இடம் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி முழுவதும் கடலோர பகுதிகளில் அரசு அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Next Story