மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்


மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 25 May 2018 12:18 PM IST (Updated: 25 May 2018 12:18 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 28 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. #DMK #MKStalin

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த போராட்டம் சென்னை சைதாப்பேட்டை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னா் எழும்பூா் ரயில் நிலையத்தின் முன்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதைத்தொடா்ந்து,  வரும் 28ஆம் தேதி சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைப்பெறும் என்று  தி.மு.க. கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளாா். இதுக்குறித்து தி.மு.க. கொறடா சக்கரபாணி கூறியதாவது,

அண்ணா அறிவாலயத்தில் எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் தலைமையில் வரும் 28ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம்  மாலை 5 மணி அளவில் நடைப்பெறும் என்ற தெரிவித்துள்ளாா். இந்நிலையில் இந்த  கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும்  பங்கேற்குமாறு  கொறடா சக்கரபாணி அழைப்பு விடுத்துள்ளாா்.

Next Story