கோவை ரெயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு
கோவையில் மழை காரணமாக ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தின் மேற்கூரையும், சுவரும் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
கோவை,
கோவையில் பெய்து வரும் மழை காரணமாக கோவை ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தின் மேற்கூரையும், சுவரும் இடிந்து விழுந்தன.
இதுபற்றிய தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவளமணி மற்றும் இப்ராகிம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story