குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம் -எச்.ராஜா பங்கேற்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம் -எச்.ராஜா பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Dec 2019 12:01 PM GMT (Updated: 2019-12-20T17:31:19+05:30)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா பங்கேற்றார்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும்,  எதிர்க்கட்சிகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். 

அதன்படி, தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story