தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடத்தல் - முத்தரசன் குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ஓட்டு எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் மிகப் பெரும் குளறுபடிகள் நடந்து உள்ளதாகவும், அதனையும் மீறி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.
Related Tags :
Next Story