திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு எதிரானது - கே.எஸ்.அழகிரி வேதனை


திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு எதிரானது - கே.எஸ்.அழகிரி வேதனை
x
தினத்தந்தி 10 Jan 2020 7:10 PM IST (Updated: 10 Jan 2020 7:10 PM IST)
t-max-icont-min-icon

கூட்டணி தர்மத்திற்கு எதிரான செயலை திமுக செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை,

உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

303 ஒன்றிய தலைவர் பதவிகளில் 2 மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மாவட்ட அளவில் திமுகவுடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.

இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பான செயல். திமுகவின் இந்த செயல் வேதனையளிப்பதாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story