கச்சா எண்ணெய் வீழ்ச்சி: பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க கூடாதா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க கூடாதா? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\ இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில், அதன் பயனை இந்திய மக்கள் அனுபவிக்க மத்திய - மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டரின் விலைவாசி குறைவது என்பது பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும்.
சர்வதேச அளவில் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும் அரசு, தற்போது குறைக்க கூடாதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story