பெருங்களத்தூரில் நடைபயிற்சி சென்ற விஏஓ உதவியாளர் அடித்துக்கொலை - 4 பேர் கைது


பெருங்களத்தூரில் நடைபயிற்சி சென்ற விஏஓ உதவியாளர் அடித்துக்கொலை - 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2020 3:08 PM IST (Updated: 2 Sept 2020 3:08 PM IST)
t-max-icont-min-icon

பெருங்களத்தூரில் நடைபயிற்சி சென்ற விஏஓ உதவியாளர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருங்களத்தூர், 

பெருங்களத்தூரில் நடைபயிற்சி சென்ற விஏஓ உதவியாளர் சங்கர் ராஜ் என்பவர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக கொலையான சங்கர் ராஜ் பெருங்களத்தூரில் விஏஓ உதவியாளராக இருந்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முறைத்து பார்த்ததால் அவரை அடித்து கொன்றதாக கஞ்சா கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளது.

கஞ்சா மதுபோதையில் இருந்த கும்பலால், ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story