மாநில செய்திகள்

குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழப்பு + "||" + Increase in the number of survivors: 8 thousand 12 people died of corona in Tamil Nadu

குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னை, 

தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 81 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,310 ஆண்கள், 2,374 பெண்கள் என மொத்தம் 5,680 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 134 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 637 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 988 பேரும், கோவையில் 446 பேரும், கடலூரில் 407 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 21 பேரும், பெரம்பலூரில் 15 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 52 லட்சத்து 85 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 383 ஆண்களும், 1 லட்சத்து 88 ஆயிரத்து 528 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 186 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 62 ஆயிரத்து 89 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 43 பேரும் என 87 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேரும், கடலூரில் 9 பேரும், சேலம், வேலூரில் தலா 6 பேரும், காஞ்சீபுரத்தில் 5 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், விழுப்புரம், செங்கல்பட்டு, திண்டுக்கலில் தலா 3 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகரில் தலா இருவரும், திருச்சி, தூத்துக்குடி, திருவாரூர், ராமநாதபுரம், நாமக்கல், மதுரை, கரூர், அரியலூரில் தலா ஒருவரும் என 28 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 599 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,097 பேரும், கோவையில் 1,087 பேரும், சேலத்தில் 552 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 50 ஆயிரத்து 213 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 922 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 879 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 196 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 459 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 64 அரசு நிறுவனங்களும், 99 தனியார் நிறுவனங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.08 கோடியாக உயர்ந்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு: உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்; மத்திய அரசு
உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையை இந்தியா அதிகம் கொண்டுள்ளது என மத்திய சுகாதார செயலாளர் இன்று கூறியுள்ளார்.
3. உடன்குடி துணை மின் நிலையத்தில் முககவசம் அணியாத அதிகாரி-ஊழியர்களுக்கு அபராதம்
உடன்குடி துணை மின் நிலையத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, முககவசம் அணியாமல் இருந்த அதிகாரி மற்றும் 6 ஊழியர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
4. கொரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை மே மாதம்-50 ஆயிரம், அக்டோபர்-57 லட்சம்
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த மே மாதம் 50 ஆயிரத்தில் இருந்து அக்டோபரில் 57 லட்சம் என்ற அளவிற்கு பன்மடங்காக உயர்ந்து உள்ளது.
5. அந்தியூர்-பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
அந்தியூர்-பர்கூர் வனப்பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. விலங்குகள் உலாவும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.