தமிழகம் முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ அமல் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ நேற்று முதல் அமலுக்கு வந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் பொது வினியோகத்திட்டம் ரூ.330 கோடி செலவில் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, புழக்கத்திலிருந்த ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம் முதல்- அமைச்சரால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை, தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் எந்தவொரு ரேஷன் கடையிலும் பெறத்தக்க வகையில் ரேஷன் கார்டுகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பொது வினியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் சொந்த மாநிலத்திலிருந்து இடம்பெயரும்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தேசிய அளவில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையில் “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக தற்போது ரேஷன் கடைகளில் பயன்பாட்டிலுள்ள விற்பனை எந்திரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, தேசிய அளவில் உள்ள ரேஷன் கார்டு தாரர்கள் தங்களது சொந்த மாநிலத்தைவிட்டு இடம்பெயரும்போது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள ரேஷன் கார்டு விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும், “ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் நேற்று (1-ந் தேதி) முதல் செயல்படுத்தப்பட்டது. மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மற்றும்திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 16-ந் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம் பெயரும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தங்களுக்குண்டான உணவு பொருட்களை உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் (பயோமெட்ரிக்) மூலம் இடம் பெயரும் மாநிலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயரும் ரேஷன் கார்டுதாரர்கள், தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள ரேஷன் கார்டை கொண்டு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு பொருட் களை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட வினியோக விலையில் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் மூலம் பெறலாம். இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்தவித இடையூறும் இன்றி உணவு தானியங் களை பெற்று பயனடையலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் தொழில்நுட்ப காரணங்களினால் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதலை மேற்கொள்ள இயலாத நிலையில், தற்போதுள்ள மின்னணு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் தொடர்புடைய செல்போனுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.), ஆதார் கார்டு மற்றும் தற்போதுள்ள நடைமுறையான ரேஷன் கார்டு ஸ்கேனிங் முறையை பின்பற்றியும் அத்தியாவசிய பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேரில் வர இயலாத பயனாளிகள், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் எம்.சுதாதேவி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வரும் ரேஷன் கார்டுதாரர்கள் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின்படி, பொருட்கள் பெற ரேஷன் கடைகளுக்கு வரும் அட்டைதாரர்களுக்கான பொருட் களை கைவிரல் ரேகை அங்கீகாரம் மூலம் வினியோகம் செய்ய வேண்டும். அப்படி வினியோகம் செய்யும்போது ஒரு கிலோ அரிசி ரூ.3; கோதுமை ரூ.2 என வசூலிக்க வேண்டும்.
அக்டோபர் 1-ந் தேதி முதல் (நேற்று) தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம் மற்றும் வார்டு தவிர மற்ற ரேஷன் கடைகளில் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே ரேஷன் பொருட்களை சம்பந்தப்பட்ட அலுவலர் கண்காணித்து, போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் எந்தவித புகாரும் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான பொருட்களை பெறுவதற்கு, உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களை நியமித்து, உரிய படிவத்தில் அவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அளிப்பதற்காக இணையதளத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அந்த நபர் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் பெறப்பட்ட ‘ஓ.டி.பி.’ எண் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோரால் நியமிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தொடர்பாக தனி பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். கைவிரல் ரேகையை அங்கீகரித்து பொருள் வழங்க இயலாதபட்சத்தில், ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி ரேஷன் கார்டுதாரருக்கு சிரமமின்றி பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும்.

Related Tags :
Next Story