தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 12 Nov 2020 6:24 PM IST (Updated: 12 Nov 2020 6:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் தூத்துக்குடி, ராணிபேட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ மீன்வளத் துறையின் மேலாண்மை இயக்குநராக இருந்த சமீரனை ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பொறுப்பு) இயக்குநராக இருந்த விஷ்ணு நெல்லை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இதன்படி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்”  என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story