மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2020 10:25 PM IST (Updated: 8 Dec 2020 10:25 PM IST)
t-max-icont-min-icon

மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


சென்னை, 

சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்த தனியார் மருத்துவக்கல்லூரி பேராசிரியை கரோலின் பிரிசில்லா, தனது மகள் இவாலினுடன் நேற்று முன்தினம் மாலை மொபட்டில் சூப்பர் மார்க்கெட் சென்றார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் நொளம்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை நொளம்பூரில் பைக்கில் இருந்து தவறி மழை நீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம், பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Next Story