சிறு-குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை


சிறு-குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2021 8:14 PM GMT (Updated: 2021-06-10T01:44:07+05:30)

சிறு-குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை மானியத்தில் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மூலமாக சாகுபடி செய்தவர்கள் தற்போது நெல் அறுவடை செய்யும் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்பனை செய்யும் போது, அவர்களிடம் இருந்து 41.5 கிலோ எடையுள்ள நெல் மூட்டைக்கு ரூ.40-ஐ தொழிலாளிகள் பெற்று வருகின்றனர். மேலும் நெல் மூட்டைகளை ஒரு வாகனத்தில் ஏற்றி இறக்குவதற்கு ரூ.1,000 வரை செலவு ஆகிறது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்ற ஆண்டு விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போதைய அரசு குறுவை சாகுபடி செய்ய மீண்டும் கடன்பெற கிராம நிர்வாக அதிகாரிகள் தாமதமின்றி அடங்கல் வழங்கவும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் வங்கிகள் மூலமும் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை மானியத்தில் அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story