கல்லணையை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கல்லணையை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Jun 2021 3:02 AM GMT (Updated: 2021-06-10T08:32:53+05:30)

கல்லணையை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.

சென்னை,

கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் நவீனப்படுத்தும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக, ஜூன் 11 ஆம் தேதி(நாளை) காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கல்லணை கால்வாய்க்கு செல்கிறார். 

அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த பின்னர், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கால்வாய்களை தூர்வாரும் பணிகள் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருவாரூர் செல்லும் அவர், தொடர்ந்து 12 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு சென்று அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் தண்ணீரை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story