மாநில செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி மு.க.ஸ்டாலின் உத்தரவு + "||" + MK Stalin orders Rs 10 lakh financial assistance to Murugesan's family killed in police sub-inspector attack

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி மு.க.ஸ்டாலின் உத்தரவு

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி மு.க.ஸ்டாலின் உத்தரவு
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை,

சேலம் மாவட்டம், இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் 22-ந்தேதி (நேற்று முன்தினம்) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், மலையாளபட்டி கிராமத்தில் உள்ள வனசோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் காவல் துறையினர் அவர்களை தணிக்கை செய்துள்ளனர்.


அப்போது காவல் துறையினருக்கும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும், தகராறு ஏற்பட்டதன் விளைவாக, ஆத்திரமடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பெரியசாமி என்பவர் தனது லத்தியால் தாக்கியதில் முருகேசன் என்பவர் மயக்கம் அடைந்து, சாலையில் விழுந்த நிலையில், அவரை தும்மல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி செய்து, பின்னர் ஆத்தூர் அரசு மருத்துமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ரூ.10 லட்சம் நிதி

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 23-ந்தேதி (நேற்று) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்க சென்றபோது, அவரை பரிசோதித்த டாக்டர், முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த துயரச்செய்தியை அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொண்டார்.

மேலும், அன்னாரின் குடும்பத்தின் நிலையைக் கருத்தில்கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு காரணமான ஏத்தாப்பூர் காவல்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் இணைந்து வணிகவரித் துறை அலுவலகங்களில் திடீர் சோதனை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் இணைந்து வணிகவரித் துறை அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகவரித் துறை முதன்மை செயலாளருக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2. ரூ.3¾ கோடி வரி விவகாரம்: கார்த்தி சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ரூ.3.86 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
3. தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் விருது மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4. சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தின் 25 சி.என்.ஜி. நிலையங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5. அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை உருவாக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.